தமிழகத்தில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற இடப்பட்ட உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் கட்சிகள், சாதி, மத குழுக்களின் கொடிகள் ஆங்காங்கே நடப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலையில், அதை விசாரித்த நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவிற்கு தற்காலிக தடை விதித்ததுடன், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Edit by Prasanth.K