செஸ் ஒலிம்பியாட் போட்டி: மகளுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (17:05 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மகளுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்!
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடக்கவிழா போட்டிக்கு பல பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
குறிப்பாக கலை துறையை பொருத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
அதேபோல் கார்த்திக் உள்பட ஒரு சில நடிகர்களும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது என்பதும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்