விஜய் கொடியேற்றிய அதே நாளில் ரஜினிகாந்த் செய்த தரமான செயல்..!

Siva

வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (06:45 IST)
நேற்று நடிகர் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து ஏற்றிய நிலையில் அதே நாளில் ரஜினிகாந்த் செய்த தரமான சம்பவம் குறித்த செய்தி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை நேற்று விஜய் ஏற்றிய நிலையில்தான் அவர் முழுமையாக அரசியலில் குதித்து விட்டார் என அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதுவரை சமூக வலைதளங்களில் மட்டுமே அரசியல் செய்து கொண்டிருந்த விஜய் தற்போது தான் களத்தில் இறங்கி உள்ளார் என்றும் இனி அடுத்தடுத்து அவரது நகர்வுகள் இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி கொடியேற்றிய அதே நாளில் ரஜினிகாந்த் வேலூர் மாவட்டத்தில் தனது ரசிகர் மன்றம் சார்பாக மாணவர்களின் கல்வி கட்டணத்தை தனது செலவில் ஏற்று உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகி உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

நமது அன்புத்தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க மத்திய தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் வழிகாட்டுதல் படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான கல்வி கட்டணம் நேரடியாக அவர்களின் கல்லூரி வங்கி கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

எங்களின் பரிந்துரையை ஏற்று அனைவருக்கும் கல்வி கட்டணம் வழங்கிய தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்