கொடி அறிமுகம் செய்த முதல் நாளே கூட்டணி பேச்சுவார்த்தையா? விஜய்யை நெருங்கும் அரசியல் தலைவர்கள்..!

Siva

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (18:16 IST)
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது கட்சியின் கொடியை அறிமுகம் செய்த நிலையில் இது குறித்த செய்திகள் பரபரப்பாக ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விஜய்யுடன் கூட்டணி வைக்க சில அரசியல் கட்சி தலைவர்கள் விருப்பப்படுவதாகவும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க நாம் தமிழர் கட்சியின் சீமான் விரும்புவதாகவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தனித்து கட்சி நடத்திய அவரால் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை என்பதால் விஜய்யை கூட்டணியில் சேர்த்தால் கூட்டணி பலமாகும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வாழ்த்து கூறியதை அடுத்து 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காவிட்டால் விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அதிமுகவும் விஜய்யை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வருவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலையும் விஜய்க்கு வாழ்த்து கூறியிருப்பதை அடுத்து பாஜக - தவெக கூட்டணியும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் விஜய் கட்சியின் கொடி அறிமுகம் செய்த முதல் நாளே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்