ரஜினிக்கு ஆதரவாக களம் இறங்கிய ரசிகர்கள் - சென்னையில் போராட்டம்

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (12:51 IST)
நடிகர் ரஜினிகாந்திற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் தெருவில் இறங்கி போராட துவங்கியுள்ளனர்.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார். அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
அந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சீமான் கடுமையான கருத்துகளை தெரிவித்தார். அதேபோல், தமிழர் முன்னேற்றப்படை இயக்கத்தை சேர்ந்த வீரலட்சு மற்றும் பலர் நேற்று சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரஜினியின் உருவ பொம்மையையும் அவர்கள் கொளுத்தினர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
 
இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவாகவும், சீமான் மற்றும் வீரலட்சுமி ஆகியோருக்கு எதிராகவும் ரஜினி ரசிகர்கள் இன்று களம் இறங்கினர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் வட சென்னை ரஜினி ரசிகர்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது அவர்கள் சீமான் மற்றும் வரலட்சுமிக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும், அவர்களின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் போலீசார் அவர்களை கைது செய்தனர். 
 
அப்போது கருத்து தெரிவித்த சில ரசிகர்கள் “ ரஜினிகாந்த மிகவும் நல்ல மனிதர். மிகச்சிறந்த ஆன்மீகவாதி. அவரைப் போல் ஒருவர்தான் தற்போது தமிழகத்தை ஆளவேண்டும். அவருக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும், நாங்கள் போராட்டம் நடத்துவோம். ரஜினி விரைவில் அரசியலுக்கு வருவார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்” என தெரிவித்தனர்.
அடுத்த கட்டுரையில்