என் வேலையை பார்க்க விடுங்கள் -விமான நிலையத்தில் சீறிய ரஜினிகாந்த்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (09:56 IST)
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதுபற்றிய செய்திகளையே ஊடகங்கள் தற்போது முன்னிறுத்தி வருகின்றன.


 

 
கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “இங்கே சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
இந்நிலையில், இந்நிலையில், பா.ரஞ்சித் இயக்கும் காலா படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் தொடங்குகிறது. அதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு புறப்புட்டு சென்றார். அப்போது, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அவரிடம், எப்போது அரசியலுக்கு வருகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். 
 
அதற்கு பதிலளித்த ரஜினி “காலா படப்பிடிப்பிறாக மும்பை செல்கிறேன். சினிமாவில் நடிப்பது என் வேலை. இது உங்களின் வேலை. எனது வேலையை செய்ய விடுங்கள். அரசியலுக்கு வருவது பற்றி விரைவில் அறிவிப்பேன்” என சற்று கோபமாக கூறி விட்டு சென்றார்.
அடுத்த கட்டுரையில்