2021 - சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்கும் ரஜினி...? ஆலோசனை கூட்டத்தில் பேசியது என்ன ?

வியாழன், 5 மார்ச் 2020 (20:13 IST)
2021 - சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்கும் ரஜினி... ஆலோசனை கூட்டத்தில் பேசியது என்ன ?

பல்வேறு கட்ட அரசியல் பரபரப்புகளுக்கு இடையே சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த், வியாழன் அன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் மாவட்ட செயலாளர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
 
மேலும், இந்த முறை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் , கட்சி தொடங்குவதைப் பற்றி ஆலோசனை செய்யவுள்ளாதாகவும், அதேபோல், அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பற்றி பேச வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
 
அதன்படி ரஜினிகாந்த், கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில், ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட செயலர்களுடன் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து, ஆலோசனை நடத்தினார். அபோது அவர்களுக்கு ரஜினி பல ஆலோசனைகளுக்கு நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
 
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர், போயஸ் கார்டன் வீட்டிற்கு வெளியே வைத்து ரஜினிகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது, ஓராண்டுக்கு பிறகு கட்சி தொடங்குவது குறித்து நிர்வாகிகளைச் சந்தித்து பேசினேன். ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசியதில் எனக்கு திருப்தியாக இருந்தது. ஆனால் தனிப்பட்ட விஷயத்தில் எனக்கு திருப்தி இல்லை.எனக்கு ஏமாற்றம் இருந்தது. அது என்னவென்று இப்போது கூற முடியாது. நேரம் வரும்போது கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், வரும் 2021 ஆம் ஆண்க்டு சட்டசபைத் தேர்தலுக்கு ரஜினி காந்த ஆரம்பிக்கவுள்ள கட்சியே கூட்டணிக்கு தலைமை தாங்கும் என்ற தகவல்வெளியாகிறது.
 
திராவிட கட்சிகளின் வேர் ஊன்றியுள்ள தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்துபோட்டி என்று ரஜினி கூறியிருந்த நிலையில், போட்டி அரசியலை சமாளிக்க வேண்டி தற்போது கூட்டணி என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. 
 
இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை  வெளியிடுவது என்று அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டட்தில் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. 
 
மேலும், ரஜினி , கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்க வாய்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்