கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால்...உதவிக்கு அழைக்கவும் ... தமிழக அரசு அறிவிப்பு !

வியாழன், 5 மார்ச் 2020 (19:51 IST)
கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தால்... உதவிக்கு அழைக்கவும் ... தமிழக அரசு அறிவிப்பு !

சீனா தேசத்திலுள்ள வூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது முதலாய் அந்நாட்டில் பல்வேறு மாகாணங்களில் பரவிய இந்த உயிர் கொல்லி வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை உலகெங்கிலும் மொத்தம் 3000 க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.
 
சீனா தேசத்த அடுத்து, அருகே உள்ள தென்கொரியாவிலும் இந்த நோய் வேகமாக பரவி வருகிறது. இத்தாலியாவில் இந்த நோய் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இரானில் 66 ஆக பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
 
அத்துடன் உலக அளவில் 90,000 க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்தியாவில் 30  பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பதாக தகவல் வெளியாகிறது.  
 
இந்நிலையில்,டெல்லியில் கொரோனோ வைரஸ் பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவிடப்பட்டுள்ளார். அனைத்து தொடக்கப் பள்ளிகளையும் மார்ச் 31 ஆம் தேதிவரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால்,  உதவிக்கு மேற்கண்ட அலைபெசி எண்கள் மற்றும் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம் என  அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்