காதுல நல்லா பூ சுத்துரீங்க.... தர்பார் லாஞ்சில் அளந்து விட்ட ரஜினி!!

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (12:11 IST)
குடியுரிமை சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் நடிகர் ரஜினிகாந்த். 
 
குடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது என திமுக காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் உட்பட பலரும் சட்டத்திருத்ததிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்நிலையில், நேற்று தர்பார் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின் போது,  நடிகர் ரஜினிகாந்திடம் குடியுரிமை சட்டம் குறித்தும் அதற்கு எதிரான போராட்டம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. 
 
இதற்கு ரஜினி, இது சினிமா விழா இங்கு டிரெய்லர் வெளியிட வந்து இருக்கிறோம். அதை பற்றி பேசலாம். சினிமா அரசியல் இரண்டையும் ஒன்றாக சேர்க்க வேண்டாம் என்று கூறினார். 
இருப்பினும், இந்த விஷயத்தில் உங்களுடைய குரல் முக்கியமானது, அழுத்தமானது. அதனால்தான் கேட்கிறேன் என்று மீண்டும் கேள்வி எழ, எனக்கு இது தொடர்பாக கருத்து உள்ளது. ஆனால் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அதற்கு ஒரு மேடை இருக்கிறது. அங்கு என்னுடைய கருத்தை சொல்வேன் என கூறியுள்ளார். 
 
இதற்கு முன்னர் பல சினிமா மேடைகளில் அரசியல் பேசியுள்ள ரஜினி இப்போது புதிதாக அரசியல் பேச மறுத்துள்ளார். இது அவரது மாற்றமா அல்லது குடியுரிமை சட்ட திருத்த கேள்வியில் இருந்து தப்பிக்க பயன்படுத்தப்பட்ட கருத்தா என கேள்விகள் எழுந்துள்ளது. 
 
ஆனால், இதற்கு முன்னர் ரஜினிகாந்த் குடியுரிமை சட்டத்திருத்தத்தை வரவேற்பதாக போலியான செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்