இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த நடிகர் ரஜினிகாந்த் இந்தியை பொது மொழியாக்குவது குறித்த தன் கருத்துகளை தெரிவித்தார். அவர் ”இந்தியாவுக்கென பொதுவாக ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது உதவும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் அப்படி கொண்டு வர முடியாது. இந்தியை பொது மொழியாக கொண்டு வருவதை தமிழ்நாடு ஒருபோது ஏற்றுக் கொள்ளாது. தமிழ்நாடு மட்டுமல்ல வட மாநிலங்கள் பலவே இதை ஏற்றுக்கொள்ளாது” என கூறினார்.
பாஜக-வின் நல்ம் விரும்பி ரஜினி என பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரஜினி ரசிகர்கள் “ரஜினி என்ன இதை இப்போதா சொன்னார்? 1995லேயே சொல்லிவிட்டார்.” என்று கூறி ஒரு வீடியோவை இணைத்துள்ளனர்.