மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பதுதான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் இந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது இந்தி மொழியால் மட்டுமே முடியும் என தெரிவித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி கூறியதாவது, எந்த்வொரு நாட்டுக்கும் பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு அது நல்லது.
ஆனால், துரதிஷ்டவசமாக நம் நாட்டில் பொது மொழியை கொண்டு வர முடியாது. அதேபோல் இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க கூடாது. இந்தி மொழியை திணித்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை தமிழகம் மட்டுமல்ல தென் இந்தியாவில் எந்த மாநிலமும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ளார்.