பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு தள்ளுபடி

Mahendran

திங்கள், 12 பிப்ரவரி 2024 (11:13 IST)
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ்-க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் தீர்ப்பளித்தது.
 
இதனிடையே விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
 இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜேபி ராஜேஷ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மூன்று ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரத்து 500 அபராதம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.  இதனை அடுத்து ராஜேஷ் தாஸ் மீண்டும் மேல் முறையீடு செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்