11 வயது, 12 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை.. தந்தைக்கு 123 வருடங்கள் சிறைத்தண்டனை..!

Mahendran

புதன், 7 பிப்ரவரி 2024 (15:34 IST)
கேரளாவில் சேர்ந்த ஒருவர் தனது 11 வயது, 12 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு 123 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரி என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 11 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் தந்தையின் பாலியல் தொல்லையை பொறுக்க முடியாத இரண்டு மகள்களும் தனது அம்மாவிடம் கூற, அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தைகளின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு 123 வருடம் சிறை தண்டனையும் 7 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்

அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்