லேப்டாப் சார்ஜ் செய்த பெண் பலி.. இராஜபாளையம் அருகே சோக சம்பவம்..!

Siva

வெள்ளி, 14 ஜூன் 2024 (21:39 IST)
விருதுநகர் அருகே ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் லேப்டாப்பை சார்ஜ் செய்ய முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கோவையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் லேப்டாப்புக்கு சார்ஜ் ஏற்றும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நடந்துள்ளது. 
 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் என்ற பகுதியில் செந்திமயில் என்ற இளம் பெண் லேப்டாப் சார்ஜ் செய்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் 
 
லேப்டாப் சார்ஜ் செய்ய முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியதாகவும் இதனால் தூக்கி வீசப்பட்ட செந்திமயில் மருத்துவமனை சென்றபோது அங்கு மருத்துவர் அவரை பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறியதை அடுத்து அவரது வீட்டினர் பெரும் சோகத்தில் உள்ளனர்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்