மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை, 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளன. குறிப்பாக சிக்னல் டிராஃபிக்கை குறைப்பதற்காக அதிக அளவிலான செல்போன் டவர்கள் மற்றும் கேபிள்கள் நாடு முழுவதும் இணைக்கப்பட்டு வருகின்றன.
முதலீடுகளை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 4G, 5G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு கட்டணத்தை 10-17% சதவீதம் உயர்த்துவதை கேட்டு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.