லேப்டாப்பில் சார்ஜ் போட்ட பெண் மருத்துவர் பரிதாப பலி.. கோவையில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

Siva

திங்கள், 27 மே 2024 (14:25 IST)
கோவையில் பெண் மருத்துவர் தனது லேப்டாப்பில் சார்ஜ் போட்ட போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவையை சேர்ந்த சரணிதா என்ற பெண் மருத்துவர் விடுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த நிலையில் அவர் தனது லேப்டாப்பிற்கு சார்ஜ் போட்டபோது மின்சாரம் தாக்கியதால் தூக்கி எறியப்பட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து விடுதி நிர்வாகி காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவம் இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெண் மருத்துவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரணிதா கையில் சார்ஜரை பிடித்தபடியே உயிரிழந்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. லேப்டாப்பில் சார்ஜ் போடும்போது பெண் மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்