சென்னையில் புதிய தொழில்நுட்ப மையம்! – அடிக்கல் நாட்டிய மத்திய அமைச்சர்!

திங்கள், 30 டிசம்பர் 2019 (08:30 IST)
பேட்டரி சக்தியில் இயங்கும் வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் சென்னையில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

நாட்டில் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகனங்களுக்கு எரிபொருள் தேவையும், எரிபொருளால் ஏற்படும் மாசுபாடுகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எரிபொருள் வாகனங்களை தவிர்த்து மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி ஆகியவற்றை தயாரிப்பதற்கான தொழில்நுட்ப மையம் சென்னையில் தொடங்கப்பட இருக்கிறது. சென்னை தரமணியில் உள்ள மத்திய அறிவியம் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தன் அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்