5 நாட்களுக்கு வெப்ப அலை இருக்காது: வானிலை அறிவிப்பால் பொதுமக்கள் நிம்மதி..!

ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (09:18 IST)
தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வரும் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் வெப்ப அலை வீசி வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல பகுதிகளில் வரும் ஐந்து நாட்களுக்கு வெப்ப அலை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு கேரளா ஆகிய பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய அறிவித்துள்ளது
 
தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்