15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..!

ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (08:05 IST)
தமிழகத்தில் சில நாட்களாக கோடை வெயில் உக்கிரமாக அடித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் உள்ள 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைஅடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடும் வெயில் அடித்து வருகிறது என்பதும் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நேற்று சென்னையில் பல பகுதிகளில் கோடை மழை பெய்தது என்பது ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்