சென்னையில் தீபாவளி அன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

Webdunia
வெள்ளி, 10 நவம்பர் 2023 (14:53 IST)
சென்னையில் தீபாவளி அன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நாளை மறுநாள் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளதை அடுத்து பொதுமக்கள் புத்தாடை எடுக்க கடைகளில் குவிந்து வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்  நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாட்களுக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று  நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை உள்பட தமிழகம் முழுவதும்  மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்