சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை.. சாலையில் மழைநீர்...!

Siva

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (07:10 IST)
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பது தேங்கி இருக்கிறது என்றும் இதனால் வாகன ஓட்டிகள் அவஸ்தையில் உள்ளனர் என்றும் கூறப்பட்டு வருகிறது.

மேற்கு திசை   காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக சென்னை உள்பட ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்த  நிலையில் நேற்று இரவு சென்னையில் கனமழை பெய்தது.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக சென்னையில் எம் ஆர் சி நகர், மந்தைவெளி, சாந்தோம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், அண்ணா சாலை, தியாகராய நகர், தேனாம்பேட்டை, நந்தனம் உள்ளிட்ட பல பகுதிகளில் விடிய விடிய மாலை கொட்டியது என்றும் தகவல் வெளியாகியுள்ளன.

அதிகபட்சமாக சோளிங்கநல்லூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இன்று காலையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பல இடங்களில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது என்பதும் அதனால் இன்று திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மற்றும் அலுவலகம் செல்வோர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னையில் பல முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் தங்களது வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்