மீண்டும் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை..எந்தெந்த தேதிகளில்?

Mahendran

வெள்ளி, 6 டிசம்பர் 2024 (14:16 IST)
தமிழகத்தில் சமீபத்தில் புயல் காரணமாக கனமழை பெய்த நிலையில், தற்போது மீண்டும் கனமழை எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், டிசம்பர் 11 ஆம் தேதி காவிரி படுகையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 12 ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பொருத்தவரை, அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்