ஜெ. மரணம் குறித்த பிரஸ் மீட்டில் வைகோவை கலாய்த்து கேள்வி: விழுந்து விழுந்து சிரித்த மருத்துவர்கள்!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2017 (16:30 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மரணம் குறித்த சந்தேகங்களும், வதந்திகளும் நீடித்து வந்தது.


 
 
இந்நிலையில் அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க இன்று செய்தியாளர்களை சந்தித்தனர் மருத்துவர்கள். இதில் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலே கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியால் மருத்துவர்கள் பீலே உள்ளிட்ட மருத்துவர்களும், அங்கிருந்த அனைவரும் பட்டென்று சிரித்துவிட்டனர்.
 
முன்னதாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவரது உடல் நிலைகுறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றுவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தான் லண்டன் மருத்துவர் ரிச்சார்ட் பீலேவிடம் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து விசாரித்ததாகவும், முதல்வருக்கு சிகிச்சை அளிப்பதற்காக அவருக்கு நன்றி கூறியதாகவும், ரிச்சார்ட் பீலே தனது விசிட்டிங் கார்டை தனக்கு தந்ததாகவும் கூறியிருந்தார் வைகோ.
 
இதனை செய்தியாளர் ஒருவர் பிரஸ் மீட்டில் வைகோ உங்களை சந்தித்ததாகவும், விசிட்டிங் கார்டை உங்களிடம் இருந்து பெற்றதாகவும் கூறியுள்ளார். அது உண்மையா என கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை கேட்டது அங்கிருந்து மருத்துவர்கள் உட்பட அனைவரும் சிரித்து விட்டனர். பிரஸ் மீட்டிற்கு சமபந்தமில்லாத இந்த கேள்வி வைகோவை கலாய்ப்பதற்காகவே அந்த செய்தியாளர் கேட்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்