1-12ம் வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை தேதிகள் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (12:48 IST)
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
 
1ஆம் வகுப்பு முதல் 3ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 2 வரை 10 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
4ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அடுத்த மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்