சன் டிவியில் குஷ்பு நடத்தும் ‘நிஜங்கள்’ நிகழ்ச்சியில் அடிதடி -பரபரப்பு தகவல்

Webdunia
திங்கள், 21 நவம்பர் 2016 (13:48 IST)
நடிகையும், இந்திய தேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, சன் தொலைக்காட்சியில் ‘நிஜங்கள்’ என்ற பஞ்சாயத்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.


 

 
இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திய    ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை போன்றது. குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றி சம்பந்தப்பட்டவர்களை நேரில் வரவழைத்து அவர்களுடன் உரையாடி, அவர்களுக்கு தீர்வு சொல்லும் நிகழ்ச்சியாகும்.
 
சன் டிவியில் இந்த நிகழ்ச்சி சமீபத்தில்தான் தொடங்கியது. குஷ்பு அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்தார். 
 
இந்நிலையில், முத்துமாரி என்ற பெண், அவரின் சகோதரி, அவரது கணவர் நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இன்று நடந்து கொண்டிருந்தது.
 
அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், முத்துமாரியின் சகோதரியை குஷ்புவின் முன்னிலையிலேயே, தகாத வார்த்தைகளால் நாகராஜ் பேசியதாக தெரிகிறது.
 
இதனால் கோபப்பட்ட மாரிமுத்து, அவரின் கணவர் நாகராஜை பாய்ந்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், நாகராஜின் சட்டையை பிடித்து அவரை தள்ளிவிட்டுள்ளார் குஷ்பு. 
 
இதனால் அங்கு கை கலப்பு ஏற்பட்டு பதட்டம் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளன.
அடுத்த கட்டுரையில்