வீட்டுத்தனிமையில் ஈடுபடுத்தி கொள்ள வழிமுறைகள் அறிவிப்பு!

வியாழன், 6 ஜனவரி 2022 (19:33 IST)
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு சில முக்கிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வெளியான அறிவிப்பின்படி வீட்டு தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது 
 
இதன்படி இரண்டு தவணை தடுப்பூசி செய்து கொண்டவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் இணை நோய் இல்லாதவர்கள் கொரோனா, ஒமிக்ரான் உறுதியானால் அவர்கள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் வீடுகளில் போதிய காற்றோட்ட வசதி இருக்கவேண்டும் என்றும் தனிமைப்படுத்துவதற்கான தனி அறை இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது 
 
மேலும் கர்ப்பிணிகள் மற்றும் 65 வயதுக்கும் மேலானவர்கள் வீட்டில் தனிமைப் படுத்திக் கொள்ளாமல் கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப் படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்