கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் உள்ளூர் போட்டிகள்- கங்குலி உறுதி!

வியாழன், 6 ஜனவரி 2022 (15:19 IST)
கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் ரஞ்சிக் கோப்பை தொடர் உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டும் ரஞ்சிக் கோப்பைத் தொடர் கொரோனா பரவலால் நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை நடக்க இருந்த ரஞ்சிக் கோப்பை இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகமாகவதால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி மாநிலக் கிரிக்கெட் வாரிய சங்க நிர்வாகிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ‘கொரோனா பரவல் முடிந்ததும் உள்நாட்டு போட்டித்தொடர்கள் கண்டிப்பாக நடத்தப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்