ரேசன் அரிசி மூட்டைகளில் QR Code: தமிழ்நாடு அரசு முடிவு!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (11:09 IST)
ரேஷன் அரசிகள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரிசி மூட்டைகளில் கியூ ஆர் கோடு  பதிவு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் ரேசன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ரேஷன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க, குடோன்களில் இருந்து ரேஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகளில் க்யூ ஆர் கோட் பதிவு செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது
 
கடந்த ஓராண்டில் மட்டும் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 11 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது
 
க்யூ ஆர் கோடு முறை பயன்படுத்தப்பட்டால் ரேஷன் அரிசி கடத்தப்படுவது தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்