கரூரில் கண் துடைப்பிற்காக குடிமராமத்துப்பணிகள் ?

சனி, 11 ஆகஸ்ட் 2018 (17:29 IST)
கரூர் மாவட்டத்தில் வெறும் கண் துடைப்பிற்காக குடிமராமத்துப்பணிகள் ? ஏதோ, சிறிதளவு தோண்டப்பட்ட வாய்க்கால்களை இதுவரை தூர்வாராததினால் தான் தற்போது வர உள்ள இரண்டாவது வெள்ளமும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயன் அளிக்காது ? கரூர் மக்கள் மற்றும் விவசாயிகள் போர்க்கொடி



தமிழகத்தில், இரண்டாம் கட்டமாக குடிமராமத்து பணிகளுக்கு, 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில், கரூர் தாலுக்கா தாலுகா, திருமாநிலையூர் ராஜவாய்க்கால், தாந்தோன்றி ராஜவாய்க்கால் ஆகிய வாய்க்கால்கள் அமராவதி நதியிலிருந்து பிரியும் மற்ற வாய்க்கால்களும் ஏதோ, பெயரளவிற்கு மட்டும் ஆங்காங்கே தூர்வாரப்படுகின்றன. மேலும், அப்போது, அதிகாரிகள் வருவதற்காக, ஆங்காங்கே 10 மீட்டர் அளவிற்கு மட்டும் ஏனோதானோ என்ற பெயரளவிற்கு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பின்னர் அப்படியே விட்டு விடுவதினால், ஆங்காங்கே தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பதோடு,. வாய்க்கால்களாக ஒடவேண்டியவைகள் எல்லாம் தற்போது கரூர் மாவட்டத்தில் சாக்கடைகளாக ஒடுகின்றன.



மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட குடிமராமத்து பணிகள் தற்போது முழு அளவில் முடிக்கப்பட்டிருந்தால், தற்போது அடுத்த மாநிலங்களில் பெய்யும், தொடர் மழையினால் நிரம்பும் அணைகளில் இருந்து தற்போது இரண்டாம் முறை திறந்து விடப்படும் அமராவதி அணையிலிருந்து வெளி வரும் வெள்ள நீர், தேவையில்லாமல், கடலில் தான் கலக்கும், ஆகவே, இந்த குடிமராமத்துப்பணிகள், எந்த பணிகளும் கரூர் மாவட்டத்தில் முடியவில்லை என்றும், ஆகவே குடிமராமத்துப்பணிகளில் கரையை பலப்படுத்துவது, மதகுகள், உபரி நீர் வெளியேற்றும் பகுதியை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தாலும் கரூர் மாவட்டத்தில் வெறும் பெயரிளவிற்கே தான் என்கின்றனர் பொதுநல ஆர்வலர்களும், விவசாயிகளும், ஆகவே மத்திய அரசும், மாநில அரசும் உடனே இணைந்து கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும், குளம், குட்டை, ஏரிகளை ஆய்வு செய்து அந்த குடிமராமத்துப்பணிகளை உடனே, நிறைவேற்ற வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் கரூருக்கு வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, தற்போது தமிழகத்தில் நீர்நிலைகளை அபகரித்து விட்டனர். ஆகவே, தூர்வாரப்படாததினால் தான் இந்த நிலை என்ற நல்லசாமி, மக்களுக்குள் குடிமராமத்துப் பணிகளை, அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கொண்டு வந்தனர். ஆகவே, தமிழ்நாட்டில் குடிமராமத்து பணிகள் என்ற சொல், கொச்சைபடுத்தப்படுகின்றது என்றதோடு,. இந்த குடிமாராமத்துப்பணிகளில் பொதுமக்களும், விவசாயிகளும் ஈடுபட்டால் மட்டுமே சாத்தியம் ஆகும் என்றார்.

வீடியோவை காண

பேட்டி : ந.சண்முகம் – சமூக நல ஆர்வலர் – கரூர்

எஸ்.வேலுச்சாமி – பொதுநல ஆர்வலர் – பாதிக்கப்பட்டு வரும் விவசாயி - கரூர்

வே.ஜாஸ்மின் – பெண் விவசாயி – கரூர்

சி.ஆனந்தகுமார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்