கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே மதுஒழிப்பு மாநாடு: பூவை ஜெகன்மூர்த்தி

Mahendran
செவ்வாய், 8 அக்டோபர் 2024 (13:09 IST)
கூட்டணி கட்சிகளை மிரட்ட வேண்டும் என்பதற்காகவே சிலர் மது ஒழிப்பு மாநாடுகளை நடத்துவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியை மறைமுகமாக புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பூவை ஜெகன்மூர்த்தி தலைமையில், இன்று மக்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார். எஸ். எஸ். சி. மக்களுக்கான 10,000 பணியிடங்களை தமிழக அரசு நிரப்பவில்லை என்றும், அவர்களுடைய வாழ்வாதாரத்தில் திமுக அரசு விளையாடி வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.
 
மேலும், "மது ஒழிப்பு மாநாடு என்று சொல்லிவிட்டு, மது குடித்துவிட்டு மாநாடுக்கு வருகிறார்கள். சிலருக்கு மது குடித்தால்தான் தூக்கம் வரும், சிலர் குடித்தால்தான் பேசுவார்கள். கூட்டணி கட்சிகளை மிரட்டவே இப்படி ஒரு மாநாடு நடைபெறுகிறது," என்றும் அவர் தெரிவித்தார். "மாநாட்டுக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து நடத்தப்படும். இப்படி ஒரு மாநாடு நடத்த தேவையே இல்லை," என்றும் அவர் கூறினார். 
 
மேலும், "எஸ்சிஎஸ்டி மக்களின் காலி பணியிடங்களை நிரப்பவில்லை என்றால், ஒவ்வொரு மாவட்டத்திலும் இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்," என்றும், "திமுக அரசின் இச்செயல்பாடுகள் தொடர்ந்தால் போராட்டத்தை கையில் எடுப்போம்," என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்