பிறந்த நாள் பார்ட்டியில் புதுமாப்பிளை அடித்து கொலை
வியாழன், 16 பிப்ரவரி 2023 (18:38 IST)
செங்குன்றம் பாடிய நல்லூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார், பிறந்த நாள் பார்ட்டியின்போது அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம் பாடிய நல்லூர் பகுதியில் வசித்து வந்தவர் செந்தில் குமார். இவர் அங்குள்ள பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று அவரது பிறந்த நாள் என்பதால், தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
பின்னர், மதுபோதையில், அதிகாலை 2 மணியளவில் அவர், அண்ணா நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சாப்பிடச் சென்றிருந்தார்.
அவரது நண்பர்கள் உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, செந்தில் குமார் வெளியில் நின்றிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த பிரகாஷ் என்பவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், பிரகாஷின் நண்பர்கள் செந்தில்குமாரை பலமாகத் தாக்கியுள்ளனர். இதைப்பார்த்து, செந்தில்குமாருடன் வந்த நண்பர்களும் பதிலுக்குத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த செந்தில்குமாரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணிமாறன் மற்றும் அவரது நண்பர் ரோஷனை கைது செய்துள்ளனர். பிராகாஷ், ராஜேஷை தேடி வருகின்றனர்.