புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகள் - தமிழிசை உத்தரவு !!

வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (12:01 IST)
புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

 
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளை விதித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவை பின்வருமாறு... 
 
# இரவு 12 முதல் காலை 5 மணி வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 
# புதுச்சேரியில் இரவு 8 மணி வரை மட்டுமே கோயில்கள் திறந்திருக்கும். 
# திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
# பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் பயணிக்க கூடாது. 
# மக்கள் ஒன்றாக கூட, திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
# ஆட்டோ, வாடகைக்காரில் 2 பேர் மட்டுமே பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
# மாஸ்க் அணியவில்லையென்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்