இ-பாஸ் இல்லாமல் நுழைந்த விவகாரம்; கறுப்பர் கூட்டம் மேல் மேலும் வழக்கு!

ஞாயிறு, 19 ஜூலை 2020 (10:41 IST)
தமிழ் கடவுள் முருகனை இழிவாக பேசியதாக கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி காவல் நிலையத்திலும் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலில் கடவுள் முருகன் மற்றும் கந்த சஷ்டி கவசத்தை இழிவு படுத்தியதாக அந்த சேனலை சேர்ந்த செந்தில் என்பவரும், தொகுத்து வழங்கிய சுரேந்திரன் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாவதாக செந்தில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சுரேந்தர் புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் கடந்த 16ம் தேதி சரணடைந்தார்.

அவரை தமிழக போலீஸார் கைது செய்து தமிழகம் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர் புதுச்சேரிக்குள் இ-பாஸ் அனுமதியின்று நுழைந்ததாக புதுச்சேரி போலீசார் தெரிவித்துள்ளனர். அனுமதியின்றி புதுச்சேரிக்குள் நுழைந்ததற்காக புதுச்சேரி அரியாங்குப்பம் போலீஸார் சுரேந்திரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்