விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை! – புதுச்சேரியில் புதிய உத்தரவு!

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (13:36 IST)
நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் அமைத்து வழிபட புதுச்சேரி அரசு தடைவிதித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் 22 லட்சத்தை கடந்துள்ளது. தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் கொரோனா தொற்று முற்றிலுமாக தீராத சூழல் உள்ளது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி அளிக்கலாமா என்பது குறித்து மாநில அரசுகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகள் நீடித்து வருவதால் புதுச்சேரியில் தெருக்களில் விநாயகர் சிலைகள் அமைத்தல், வழிபாட்டிற்காக கூடுதல், பிரசாதம் வழங்குதல், விநாயகர் கோவிலகளில் வழிபடுதல் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் கோவில்கள், தெருக்கள் மற்றும் தனியார் பகுதிகளில் சிலைகள் அமைக்கப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் நிலைபாடு என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்