ஆட்சியே கவிழ்ந்தாலும் அதை மட்டும் செய்ய மாட்டோம்! – நாராயணசாமி நறுக்!

செவ்வாய், 17 டிசம்பர் 2019 (19:03 IST)
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய குடியுரிமை மசோதாவிற்கு எதிராக இன்று புதுச்சேரியில் முதல்வர் நாரயணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் மாணவர்கள் போராட்டம் என்றால், மறுபுறம் எதிர்க்கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. கேரளாவில் ஆளும் சிபிஎம் மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதல்வர் ”மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டம் இந்திய அரசியலமைப்புக்கே எதிரானதாகும். புதுச்சேரியில் ஆட்சியே கவிழ்ந்தாலும் கவலையில்லை. குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

ஆட்சியே கவிழ்ந்தாலும் #புதுச்சேரி மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமுல்படுத்த மாட்டோம்.#Puducherry pic.twitter.com/GexDgcB8fp

— V.Narayanasamy (@VNarayanasami) December 17, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்