புதுவையில் ஆன்லைன் ரம்மி தடை எப்போது? அமைச்சர் அறிவிப்பு

வெள்ளி, 21 அக்டோபர் 2022 (21:59 IST)
தமிழகத்தைப் போலவே விரைவில் புதுவையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆன்லைன் விளையாட்டு காரணமாக ஏராளமானோர் தங்களுடைய லட்சக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளனர். அதுமட்டுமின்றி விலைமதிப்பில்லா உயிர்களும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து ஆன்லைன் விளையாட்டைத் தடை செய்யும் மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது என்பதும் இந்த சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்யும் கோப்புகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து மசோதா ஏற்றப்படும் என்றும் அமைச்சர் நமசிவாயம் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்