ரஷியாவுக்கு ட்ரோன்கள் வழங்கிய ஈரான்...பொருளாதார தடை விதிக்க உக்ரைன் கோரிக்கை

புதன், 19 அக்டோபர் 2022 (21:56 IST)
வல்லரசு நாடான ரஷியா, சிறிய நாடான  உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. ஏழரை மாதங்களுக்கு மேலாக இப்போர் தொடர்ந்து  நடந்து வரும்  நிலையில், ரஷியாவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில்,  உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா சில நாட்களாக தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,  சமீபத்தில் உக்ரைனின் கிவ் நகர் மீது ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்திய நிலையில்,  ஆளில்லா ட்ரோங்கள் மூலமும் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது
.
இந்த டிரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டது எனவும், காமிகேஸ் என்று பெயரிடப்பட்ட இந்த ட்ரோன் கள் மக்கள் குடியிருப்புகள் உள்ளிட்டவற்றில் தாக்குதல் நடந்து வருவதாகவும்  உக்ரைன் தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டின் டிரோன்கள் அதில்லை என்று ஈரான் மறுத்துள்ள போதிலும், இந்தத் தாக்குதலுக்கு காரணமாக ஈரானுடனான உறவை துண்டிக்கப் போவதாக உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், ரஷியாவுகு உதவும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கவும் உக்ரைன் ஐரோப்பிய நாட்டுகள் கூட்டமைப்பிடம் கேட்டுக் கொண்டதாகவும் தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்