சென்னை படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், சஞ்சீவி ராஜ் என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து, கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று, குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை கைது செய்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.