11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
வெள்ளி, 10 மார்ச் 2023 (17:01 IST)
11 ,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் மார்ச் 13 ஆம் தேதி முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி பிளஸ்2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு நடக்கவுள்ளது. அதேபோல், பிளஸ்1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடக்கவுள்ளது.
தமிழகத்தில் 3185 மையங்களிலும், புதுச்சேரியில் 40 மையங்களிலும் தேர்வு நடக்கவுள்ளது.
இந்த நிலையில், இன்று 11, 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
அதில், பொதுத்தேர்வின் போது பணியி ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் செல்போன் வைத்திருக்க அனுமதியில்லை. இதை மீறி மாணவர்கள், ஆசிரியரக்ள் தகவல் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர்களின் செல்போன் பராமறிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பு ஏற்காது.
ஆள்மாறாட்டம் செய்தால் பிடிபடும் மாணவர் அல்லது மாணவிக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
காப்பி, அடுத்து எழுதினாலோ, விடைத்தாள்கள் மாற்றினாலோ பிடிபடும் மாணவர்களுக்கு ஓராண்டு தடைவிதிக்கப்படும்.
ஒழுங்கீன செயல்களுக்கு பள்ளி நிர்வாகம் உடந்தையாக இருந்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுப்பட்டுள்ளது.
தேர்வு காலத்தின்போது, மாணவ, மாணவிகள், காலை 8 மணி முதல், இரவு 8 மணி வரை தேர்வுக் கட்டுப்பாடு அறையை இந்த எண்கள் 9498383081 , 9498383075- மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், மற்றும் தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்டுகள் ஆன் லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த ஹால் டிக்கெட்டில் மாணவர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் படித்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.