சினிமாவில் வருவது போல கொடூரமாக இருந்தது; கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள்

சனி, 23 செப்டம்பர் 2017 (13:15 IST)
கோவையில் நடந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள், சினிமாவில் வரும் திகில் காட்சி போல கொடூரமாக இருந்தது என கூறியுள்ளனர்.


 

 
கோவை செல்வபுரம் ஐயுடிபி காலனியைச் சேர்ந்த செல்வராஜ் மற்றும் அவரது நண்பர் ஆனந்த ஆகியோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் பதற்றத்தில் உறைந்தனர். இதுகுறித்து நேரில் பார்த்த பொதுமக்கள் கூறியதாவது:-
 
மதியம் 1.30 மணிக்கு எங்கள் பகுதி சாலையில் ஆட்டோ ஒன்று வேகமாக வந்தது. அந்த ஆட்டோவிற்கு பின்னால் மோட்டர் சைக்கிள் மற்றும் காரில் சிலர் துரத்தி வந்தார்கள். அவர்கள் கையில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்தன. இதை பார்த்ததும் நாங்கள் அனைவரும் அலறியடித்து வீடுகளுக்குள் ஓடி விட்டோம். 
 
அந்த ஆட்டோ சாக்கடை கால்வாய்குள் சிக்கியது. அதில் இரண்டு பேரும் காப்பாறுங்கள் என அலறியபடி ஓடினார்கள். அவர்களை துரத்தி வந்த கும்பல் மரத்தை வெட்டுவது போல் சரமாரியாக வெட்டித்தள்ளினர். இதுபோன்ற திகில் காட்சிகளை சினிமாவில்தான் பார்த்து இருக்கிறோம். நேரில் பார்த்த பல பெண்கள், குழந்தைகள் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றனர்.
 
கோவையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்