குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்குதல் - மூதாட்டி பலி

Webdunia
புதன், 9 மே 2018 (16:41 IST)
கோவிலுக்கு சாமி கும்பிட வந்த 5 பேரை பொதுமக்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள அத்திமூரில் உள்ள ஒரு கோவிலுக்கு 5 பேர் சாமி கும்பிட வந்துள்ளனர். அவர்கள், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் குழந்தைகளை கடத்த வந்துள்ளனர் என நினைத்த அவர்கள் அந்த 5 பேரையும் கொடூரமாக அடித்து உதைத்தனர்.
 
அதில், ருக்குமணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 4 பேரையும் போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
 
வாட்ஸ்-அப்பில் குழந்தை கடத்தல் தொடர்பான செய்திகள் பரவுவதால் பொதுமக்கள் குழப்பமடைந்தும், சந்தேகப்பட்டும் இதுபோல் அவசரப்பட்டு தவறு செய்கின்றனர். சட்டத்தை காப்பாற்ற காவல்துறை இருக்கிறது.எங்களிடம் தகவல் கொடுங்கள். வதந்திகளை நம்ப வேண்டாம் என பல வழிகளில் தகவல் கொடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் நடந்துவிடுகிறது. இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொன்னி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்