மதுரையை எழில்மிகு நகரமாக மாற்ற நடவடிக்கை: நிதியமைச்சர் டுவிட்

புதன், 7 ஜூலை 2021 (20:59 IST)
மதுரையை எழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
தமிழகத்தை ஆட்சி செய்யும் அனைத்து அரசுகளும் சென்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் மதுரை கோவை திருச்சி சேலம் உள்ளிட்ட நகரங்களை கவனிப்பதில்லை என்றும் பல ஆண்டுகளாக குற்றச்சாட்டில் இருந்து வருகிறது
 
குறிப்பாக கோவில் நகரமான மதுரையை அரசு கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் மதுரைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது இது குறித்து தமிழக நிதியமைச்சர் பியூட்டி ஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
 
மதுரையை எழில்மிகு நகரமாக மாற்ற தூய்மை பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று மேலவாசலில் நடந்த மாபெரும் தூய்மைப்பணிகளை துவக்கி வைத்தோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க மக்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தால் மாநகராட்சி எடுக்கும் முயற்சிகள் பெருமளவு வெற்றி பெறும்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்