போட்டுக்க ஷூ கூட இல்ல.. தன்னம்பிக்கையால் நிறைவேறிய ஒலிம்பிக் கனவு! – மதுரை மாணவிக்கு குவியும் வாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஜூலை 2021 (12:04 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் மதுரை மாணவி ஒருவர் பங்கேற உள்ள நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக பிரபலமான ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23 முதல் தொடங்கி நடைபெற உள்ளன. இதில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும் நிலையில் தடகள பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தேர்வாகியுள்ளார் மதுரை மாணவி ரேவதி.

மதுரையை சேர்ந்த தடகள வீராங்கனையான ரேவதி சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து பாட்டியிடம் வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே தடகள போட்டிகளில் ஈடுபாடு கொண்ட ரேவதி ஓடுவதற்கு ஷூ இல்லாதபோதும் வெறும் காலிலேயே ஓடி பயிற்சி பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் தகுதி போட்டியில் 400 மீட்டர் தூரத்தை 55 வினாடிகளில் கடந்து தகுதி பெற்றுள்ளார் 22 வயதான ரேவதி. ஒலிம்பிக்கில் 4x400 பிரிவில் தகுதி பெற்றுள்ள ரேவதிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்