கன்னியாக்குமரி வரும் நிர்மலா சீதாராமன்; ப்ளானை மாற்றிய பிரியங்கா காந்தி!

Webdunia
வெள்ளி, 26 மார்ச் 2021 (09:35 IST)
நாளை தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வர இருந்த பிரியங்கா காந்தி தனது தமிழக பயணத்திட்டத்தை மாற்றியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கன்னியாக்குமரியில் நாடாளுமன்ற இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் கன்னியாக்குமரி இரட்டிப்பு கவனம் பெற்றுள்ளது. கன்னியாக்குமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த்தும், பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த்தை ஆதரித்து பிரச்சாரம் செய்ய பிரியங்கா காந்தி நாளை கன்னியாக்குமரி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பிரியங்கா காந்தி தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது இதுவே முதன்முறை. இந்நிலையில் நாளை குமரியில் பாஜகவுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளதால் தனது தேர்தல் பிரச்சார பயணத்தை ஒத்தி வைத்துள்ளார் பிரியங்கா காந்தி. புதிய திட்டப்படி ஏப்ரல் 3ம் தேதி கன்னியாக்குமரியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை பிரியங்கா காந்தி நடத்த உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்