தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் தனியாருக்கு சொந்தமாக பள்ளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான பள்ளிகள் அரசு நிர்ணயத்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணமாக பல ஆயிரம் ரூபாய் வசூலித்து வருகிறது. வசூலிக்கும் கொள்ளைக் கட்டணத்திற்கு ரசீதுகள் கொடுப்பதில்லை. இது குறித்த புகார்கள் தமிழக அரசுக்கு சென்ற வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால், அது குறித்த புகாரை, பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் அலுவலம், டிபிஐ வளாகம், கல்லூரிச்சாலை, சென்னை - 600 006 என்ற முகவரிக்கு எழுத்துபூர்வமாக புகார் அளிக்கலாம். மேலும், 044 - 28 27 01 69 என்ற எண்ணிற்கும், 044 - 28 25 11 08 என்ற ஃபேக்ஸ் எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு பொது மக்கள் தெரிவிக்கும் புகாருக்கு உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகள் தயராக உள்ளனர்.