ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

Prasanth Karthick
திங்கள், 27 மே 2024 (21:27 IST)
மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி குமரியில் தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.



இந்தியாவில் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடந்து வரும் நிலையில் அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 3ம் தேதியன்று நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்தது முதலாகவே பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பல மாநிலங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் ஜூன் 3ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பிரதமர் மோடி மே 30ம் தேதி தமிழகம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கன்னியாக்குமரி செல்லும் அவர் அங்கு 2 நாட்கள் தங்கியிருந்து தியானம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ: ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சமீபத்தில் வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது கங்கை நதியில் பூஜை செய்தவர் கங்கை தாய் தன்னை தத்தெடுத்துக் கொண்டதாக கூறியிருந்தார். அதன்பின்னர் ஒரு நேர்க்காணலில் தான் பயாலஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தான் பரமாத்மாவால் அனுப்பப்பட்டவன் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் குமரியில் அவர் தியானம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக பிரதமர் மோடி இதேபோல இமயமலை சென்று அங்குள்ள குகையில் தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்