ஒரே அணியில் அதிமுக-திமுக: பாஜகவின் முயற்சி பலிக்குமா?

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (06:32 IST)
அதிமுகவும், திமுகவும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் நிலையில் இரண்டு கட்சிகளையும் ஒரே அணியில் இணைக்க பாஜக முயன்று வருகிறது. இந்த அணி, அரசியல் கூட்டணிக்காக இல்லை என்பதும் குடியரசு தலைவரின் தேர்தலுக்கான ஆதரவு என்பதும் குறிப்பிடத்தக்கது.



 


அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கான புதிய வேட்பாளராக பீகார் மாநில முன்னாள் முதல்வர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பாஜக சமீபத்தில் அறிவித்தது. இவருக்கு ஆதரவு கேட்டு பல்வேறு கட்சிகளிடம் பாஜக தலைவர்கள் ஆதரவு கேட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக ஆதரவை ஏற்கனவே கேட்டு கிட்டத்தட்ட பெற்றுவிட்ட பாஜக, தற்போது திமுக ஆதரவையும் கேட்டுள்ளது. இதுகுறித்து 'தமிழக பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் கூறுகையில், ‘’திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகளின் ஆதரவை குடியரசுத் தலைவர் தேர்தலில் கோர முடிவு செய்துள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பாஜக சார்பாக, ஆதரவு திரட்டுவோம்,’’ என்று கூறியுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலுக்காக ஒரே அணியில் அதிமுக, திமுகவை இணைக்கும் பாஜக முயற்சி பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்