இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டியுள்ளது. இதை பார்த்த மாரியப்பன் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க கால்வாய் கரை ஓரம் ஓடினார். பின்னால் துரத்தி சென்ற கும்பல் அவரது கை, கால்களில் அரிவாளால் வெட்டியது. பின்னர் அவரது தலையை துண்டித்து எடுத்தது. இதில் ரத்த வெள்ளத்தில் மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். துண்டிக்கப்பட்ட தலையை கும்பல் அங்குள்ள கால்வாய்க்குள் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மாரியப்பன் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சங்கர், மனைவி லட்சுமி ஆகியோர் மாரியப்பன் உடலை பார்த்து கதறி அழுதனர். கொலை செய்யப்பட்ட மாரியப்பனின் மனைவி லட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்று காலை வளைகாப்பு நடக்க இருந்தது. இதை அடுத்து, காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த 4 பேரை தேடி வருகின்றனர்.