இந்தியாவிலிருந்து மாணவர்கள் பலர் உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் நிலையில், வெளிநாட்டு மாணவர்களை மோசமாக சித்தரித்து அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து மாணவர்கள் பலர் உயர்கல்விக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் என பல நாடுகளுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது. பெரும்பாலும் அமெரிக்காவின் ஹார்வர்டு, கொலம்பியா, ஸ்டான்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
சமீபமாக உலக நாடுகளை தங்கள் கைப்பாவை போல நினைத்து ஆட்டிப்படைத்து வரும் அமெரிக்கா தற்போது மாணவர்கள் மீது தனது கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் என்ற போர்வையில் நுழையும் சிலரால் அமெரிக்க மக்களின் வரிப்பணம் வீணாகி விட்டதாகவும், அமெரிக்க மக்களுக்கே அது அச்சுறுத்தலாகிவிட்டதாகவும் விமர்சித்துள்ளது.
மேலும், வெளிநாட்டிலிருந்து மாணவர்கள் விசாவில் வருபவர்கள் அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே அமெரிக்காவில் இருக்க முடியும். பார்வையாளர்கள் விசாவில் வருபவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கும் காலம் வரை தங்கியிருக்க முடியும். பத்திரிக்கையாளர்கள் 240 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படுவார்கள் என விசா நடைமுறைகளை கடுமையாக்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Edit by Prasanth.K