சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியுமா?

வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (12:41 IST)
சட்டசபை சபாநாயகரின் முடிவில் நீதிமன்றத்தின் தலையீடு தொடர்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் அடுத்த மாதம் தெரிவிக்க உள்ளது.


 

 
சமீபத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால், தகுதி நீக்கத்திற்கு தடை கிடைக்கவில்லை. இந்த வழக்கு வருகிற அக்டோபர் 4ம் தேதி விசாரணைக்கு மீண்டும் வரவுள்ளது.  இந்த வழக்கில் தகுதி நீக்கத்திற்கு தடை கிடைக்காவிடில், தினகரன் தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடும் எனத் தெரிகிறது.
 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள 3 ஆண்டுகளுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது என நீதிமன்றம் கை விரித்துவிடது.
 
எனவே, அந்த எம்.எல்.ஏக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா? அப்படி முடியும் எனில் அந்த அளவிற்கு தலையிட முடியும் என்கிற சந்தேகங்கள் மனுதாரர் மனுவில் எழுப்பப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது. அரசியல் சாசான அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. தமிழகம் இது போன்ற சூழ்நிலையை சந்தித்திருக்கும் வேளையில், ஊச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்